About Us

about us

தேனியில் நட்டாத்தி நாடார்கள்

தமிழ் இலக்கியங்களில் கூறப்படும் ஐவகை நிலத்தோற்றத்தில் முதல் மூன்று நிலத்தோற்றங்களான குறிஞ்சி, முல்லை, மருதம் ஆகிய பிரிவுகளாலும் சூழப்பட்டு எழில்மிகு நகரமாகத் திகழ்வது தேனி மாநகர்.

தமிழகத்தின் முக்கிய வணிக ஸ்தலமாகத் திகழும் இந்நகர் 120 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு சிற்றாராகவே இருந்தது. நாளடைவில் தமிழகத்தின் L160 ஊர்களிலிருந்தும் குறிப்பாக சிவகாசி, விருதுநகர், சாத்தூர், தாத்துக்குடி, நட்டாத்தி, உசிலம்பட்டி, எரிசநத்தம், கோவில்பட்டி, திருநெல்வேலி என பல பகுதிகளில் இருந்து வந்த நாடார் குல பெருமக்கள் தேனியில் குடியேறி வணிகத்தில் ஈடுபட்டனர். அவர்களுள் நட்டாத்தி நாடார்கள் 18 குடும்பத்தைச் சார்ந்தவர்களும் அடங்குவர்.

அந்த காலகட்டத்தில் அல்லிநகரம் தான் பிரதான ஊர். தேனியை கூட்டுச் சாலை என்று கூறுவார்கள். கம்பம் ரோடு, பெரியகுளம் ரோடு, மதுரை ரோடு என்று பிரதான வெளியூர் சாலைகள் சந்திக்கும் கூட்டுச்சாலை பகுதி, கிழக்குப் பகுதி பங்களா வீடு அடுத்து கம்பம் ரோடு, பெரிய மேட்டுப் பகுதி ஆகிய இடங்களில் ஒரு சில வீடுகள் இருக்கும்.

0

Years of Experience

அப்பொழுது மாட்டுவண்டி போன்ற வாகனங்களில் பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்து சாலையோரம் நிறுத்தி வியாபாரம் செய்து வருவர். பிறகுதான் அந்தப் பகுதியில் குடியேற்றம் பெருக ஆரம்பித்தது. அதன் பின்னர் தாய் கிராமமான அல்லிநகரத்திலிருந்து இங்கு வந்து குடியேற ஆரம்பித்தார்கள். திருமங்கலத்தை சேர்ந்த கே.டி.கூலைய நாடார் அவர்கள் இங்கிலாந்துக்கு பஞ்சு ஏற்றுமதி செய்வதற்காக முதன்முதலில் ஒரு ஆலையை தேனியில் நிறுவினார்.

அன்று முதல் தேனி தொழில் வளர்ச்சி அடைந்த பகுதியாக மாறியது. தேனியை உருவாக்கியதில் பெரும் பங்கு வகித்தவர்கள் நாடார் சமூகத்தினரே.

who we are

தேனியில் நாடர்கள் உறவின்முறை

விருதுநகர் நாடார் தவிர்த்து மற்ற பகுதிகளில் இருந்து வந்த நாடார்கள் அனைவரும் சேர்ந்து தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை என்ற ஓர் அமைப்பை உருவாக்கினர். ஆரம்ப காலகட்டத்தில் விருதுநகரில் ஏற்கனவே இருந்த பிடி அரிசி திட்டத்தை இந்தப் பகுதிகளிலும் நடைமுறைப்படுத்தினர். அதாவது ஒவ்வொரு வியாபாரியும், உறுப்பினரும் பிடி அரிசியை சங்கத்திற்கு கொடுப்பது என்றும், அதை சேர்த்து வைத்து சங்கச் செயல்பாடுகளுக்கு பயன்படுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டு அதை நடைமுறைப்படுத்தி உறவின்முறையை சிறப்பாக வளர்த்தனர்.

நிர்வாகிகள் - பட்டியல்

1-5-1954 இல் தேர்ந்தெடுக்கப்பட்டபின் வந்த நிர்வாகிகள் - பட்டியல்

உறவின்முறை

தேனியில் நட்டாத்தி க்ஷத்திரியகுல இந்து நாடார் உறவின்முறை தர்ம நிதி - தோற்றம்

1942-இல் தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை சங்கத்தில் இருந்து சில காரணங்களுக்காக நட்டாத்தி நாடார்கள் பிரிந்து தமக்கென்று ஒரு உறவின்முறை அமைக்க வேண்டுமென்ற ஆர்வம் அவர்களிடையே தோன்றியது. நட்டாத்தி நாடார் சமூகத்தின் பெரியோர்களான கே.கே. சீனியப்ப நாடாரின் தகப்பனராகிய திரு. கா. கந்தசாமி நாடார் அவர்கள் இல்லத்தில் முதல்முறையாகக் கூடி தேனி நட்டாத்தி நாடார்கள் உறவின்முறை அமைப்பதற்கு வித்திட்டார்கள். முத்துக்குமார் நாடார் தலைமையில் 26.06.1942 அன்று (262-50) இருநூற்று அறுபத்து இரண்டு ரூபாய் ஐம்பது பைசா பங்கு தொகையாக பிரித்து வாங்கப்பட்டு தனியாக தேனி நட்டாத்தி ஷத்திரியகுல இந்து நாடார்கள் உறவின்முறை தர்மபண்டு என்ற சங்கத்தை துவங்கினர்.

உறவின்முறையின் வளர்ச்சி ஆரம்பத்தில் மகமைக்கு ரூபாய்க்கு பதிலாக பிடி அரிசி ஒவ்வொரு வீட்டிலும் வசூலித்தார்கள். அதன்பின்னர் மகமை வசூல் சிறுதுளி பெரு வெள்ளமாக பெருகியது. சங்கத்திற்காக பங்களாபட்டி தெருவில் காலி மனையும், ஒரு கட்டிடமும், பகவதி அம்மன் கோவில் தெருவில் வாங்கப்பட்டது.

அன்று சங்க வளர்ச்சிக்காக ஆண்கள் மகிமையை பணமாக வழங்கினார். நமது வீட்டு பெண்கள் பிடிஅரிசி வழங்கினார்கள் என்பதுடன் தேனியில் வார சந்தை கூடும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, மதுரை மற்றும் வெளியூர்களிலிருந்து வியாபாரம் செய்ய வரும் நட்டாத்தி நாடார்கள் தேனி நட்டாத்தி ஷத்திரியகுல இந்து நாடார்கள் உறவின்முறை தர்மபண்டுக்கு மகமை வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

1.5.1954 இல் நட்டாத்தி நாடார்கள் உறவின்முறை அமைப்புக்கூட்டம் சங்கக் கட்டிடத்தில் கூடி திரு.ச.மு.ச.ஆ.பாண்டி அவர்களை காரியதரிசியாகவும், நிர்வாக உறுப்பினர்களாக

  • திரு.மு.நா.பழனிச்சாமி நாடார்
  • திரு.ரா.ம.பு.பரமசிவ நாடார்
  • திரு.அ.பழனிச்சாமி நாடார்
  • திரு.க.புதுராஜா நாடார்
  • திரு.தி.முத்துக்குமார் நாடார்
  • திரு.சு.தங்கப்ப நாடார்
  • திரு.மு.நடராஜ நாடார்

Open For Appointments

4.9 Nattathi Overall Rating Based On 7541 Reviews

Our Mission and Vision

Mission and Vision

Our visions

“To provide universal health to all”

Our Missions

“To provide quality health care at affordable cast”

Nattathi Highlights

Network of modern pharmacies and diagnostics centers in the rural areas in and around theni.

Home health care for the sick right at their door steps.

Our quality care continuous

TNKHNU charity fund hospital is accredited by national accreditation board for hospital and healthcare providers (NABH)

உறவின்முறைக் கட்டிடங்கள்

1966 - V.P.S.A. சுந்தரநாடார் அவர்கள் 51 சென்ட் N.R.T. மருத்துவமனை அமைவிடம் V.P.S.A. சுந்தரநாடார் அவர்கள் அதிகாரத்தில் வாங்கி மெம்பர் ச.மூக்கையா அவர்கள் மூலமாக உறவின்முறைக்கு இடம் வாங்கும்படி கூறி உறவின்முறையார் திரு. EAK. ஆதி நாராயணநாடார், SMSAR. பாண்டியர். KK. சின்னப்பநாடார். SK அருணாசலநாடார் அவர்களிடம் எடுத்துக்கூறி உறவின்முறைக்காக வாங்கப்பட்டு உறவின்முறையால் பணம் கொடுக்கப்பட்டது. மேற்கூறியவர்களால்

தேனி நட்டாத்தி நாடார்கள் உறவின்முறையின் நிதி ஆதாரங்களைக் கொண்டு 1955ல் தேனி பங்களாபட்டியில் ஆறு வீடுகள் கட்டப் பெற்று வாடகைக்கு விடப்பட்டன. 1959ல் பகவதி அம்மன் கோவில் தெருவில் உள்ள சங்கக் கட்டிடத்தில் மாடிக் கட்டிடம் கட்டப்பட்டது. அதில் திருமணம் மற்றும் விசேஷங்கள் நடத்த வாடகைக்கு விடுவதென்று தீர்மானிக்கப்பட்டது.

1959ல் பகவதி அம்மன் கோயில் தெருவில் உள்ள சங்க கட்டிடத்தில் மாடி கட்டிடங்கள் கட்டப்பட்டன.

22.2.1966இல் திரு E.A.K. ஆதி நாராயண நாடார் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் N.R.T நகர் ரோட்டில் உள்ள நமது உறவின்முறைக்குப் பாத்தியப்பட்ட காலி மனைகளில் தொடர் வீடுகள் கட்டுவதென்று தீர்மானிக்கப்பட்டது. வீடுகட்டும் பொறுப்பினை திரு.சி.முக்கையா ஆகிய நால்வரிடம் உறவின் முறையார் ஒப்படைத்து திரு.கா.சீனியப்ப நாடார் அவர்களது முயற்சியால் ஒன்பது வீடுகள் கட்டப்பெற்று 1.11.1968இல் நமது சமூகத்தினர் அனைவரும் ஒன்றுகூடி பால் காய்ச்சி, கிரகப் பிரவேச விமாவும் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

1975ம் வருடம் தேனி நட்டாத்தி ஷத்திரியகுல இந்து நாடார்கள் உறவின்முறை தர்மபண்டு 1860 ஆம் வருடத்திய சொசைட்டி ரிஜிஸ்ட்ரேஷன் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டது.

7-7-1975 அன்று பதிவு செய்யும் பொழுது இருந்த நிர்வாகிகள்

பெயர் பதவி
K.நாகராஜன் தலைவர்
அ. ராஜாமணி நாடார் துணைத்தலைவர்
சு.க.அ சிவகுமார் காரியதரிசி
எ.ஆ.கு. ஆத்திக்கண் பொருளாளர்
கா.க. சீனியப்ப நாடார் அங்கத்தினர்கள்
எ.ஆகு.ஆ. சிவப்பிரகாசம் (B.Com) அங்கத்தினர்கள்
ரா.ஆ. சுப்பிரமணி அங்கத்தினர்கள்
வி. கந்தசாமி நாடார் அங்கத்தினர்கள்
சா.மு.சா.ரத்தினசாமி நாடார் அங்கத்தினர்கள்
சு.கந்தப்பன் அங்கத்தினர்கள்
க. வீரசிகாமணி அங்கத்தினர்கள்
ரா.குமாரவேல் நாடார் அங்கத்தினர்கள்
அ.பழனிச்சாமி நாடார் அங்கத்தினர்கள்
பெ.ஞானகுருசாமி அங்கத்தினர்கள்
மு.நா.பழனிச்சாமி நாடார் அங்கத்தினர்கள்
ஆர்.எம்.பி.பி. பரமசிவ நாடார் அங்கத்தினர்கள்

நோக்கங்கள்

உறவின்முறையின் நோக்கங்கள்

  • பொது மக்களிடையே ஒற்றுமை வளரச் செய்தல்.
  • பொது மக்களின் அறிவு வளர்ச்சிக்கான நூலகம், பள்ளிக்கூடம், கல்லூரியை நிறுவி நடத்துவதோடு அப்படிப்பட்ட பிற ஸ்தாபனங்களுக்கு உதவி செய்தல்.
  • கல்வி பயிலும் தகுதி வாய்ந்த ஏழை மாணவ, மாணவியருக்கு உதவித் தொகை வழங்கியும், கல்விக்கு உதவித் தொகை வழங்கியும், கல்விக்கு உதவி செய்தும் ஊக்குவித்தல்.
  • ஏழைகள், உடல் ஊனமுற்றோர். கணவனை இழந்த பெண்கள், ஆதரவற்றோர் இவர்களின் நல்வாழ்விற்காகவும், வாழ்க்கை விடுதிகளையும், மறுமலர்ச்சிக்காகவும், மனைகளையும் ஏற்படுத்தி நடத்துதல்.
  • மக்கள் பொது நன்மைக்காக இயங்கி வரும் பிற சங்கங்களுக்கும் ஸ்தாபனங்களுக்கும் நிதி உதவி செய்தல்.

கல்வித் தொண்டு

உறவின்முறையின் கல்வித் தொண்டு

1.6.1975 முதல் ஆண்டுதோறும் LIRRT வசதியற்ற மாணவியர்களுக்கு புத்தகம், நோட்டு வாங்குவதற்கு ரூ.300 வழங்கப்பட்டது. 1984ஆம் வருடம் முதல் இந்த உதவித்தொகை ரூ.500ஆக உயர்த்தப்பட்டது.

உறவின்முறையின் அங்கத்தினர் மரணம் அடைந்தால் குடும்பத்தினரின் அன்றைய செலவுக்காக உறவின்முறை சார்பில் ரூ.200ம், திரு. K.K. சீனியப்ப நாடார் நினைவாக திரு. K.K.S. கதிரேச பாண்டியன் அவர்கள் வழங்கும் ரூ.100ம் சேர்ந்து ரூ.300 வழங்கப்பட்டு வந்தது.

தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின் முறையில் இருந்து பிரிந்தாலும் மேலப்பேட்டை உறவின் முறையோடு நல்ல தொடர்பில் இருந்துள்ளனர். அதற்கு எடுத்துக்காட்டாக 19.12.1966இல் தேனி மேலப்பேட்டை உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பள்ளிக்கூட விடுதிக்கு எவர்சில்வர் பாத்திரங்கள் வாங்குவதற்கு ரூ.2000/- நன்கொடையாக வழங்கப்பட்டது.

1993இல் தேனி மேலப்பேட்டை உறவின்முறைக்குப் பாத்தியப்பட்ட நாடார் சரசுவதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் பொன்விழாவை முன்னிட்டு ரூ.5032/- மதிப்பில் காட்ரேஜ் பீரோ Title Get genuine Office Subtitle 15 Learn more Add-ins Find Replace Select Editing Add-ins அன்பளிப்பாக வழங்கப்பட்டது. உசிலம்பட்டி நட்டாத்தி நாடார்கள் உறவின்முறைக்குப் பாத்தியப்பட்ட நாடார் சரஸ்வதி வித்தியா சாலைக்கு கட்டிடங்கள் கட்டுவதற்கு 16.7.1971இல் ரூ. 5.5006/-ம் 9.6.1972இல் ரூ. 3016/-ம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

தேனியில் நாடார்களுக்கு என்று தனி மயானம் உள்ளது. அதன் நிர்வாகம் தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறையிடம் உள்ளது. மயானச் சீர்திருத்தத்திற்காக மேலப்பேட்டை உறவின்முறை வசம் 29.4.1975 அன்று ரூபாய். 2101/-

தேனி மேலப்பேட்டை உறவின்முறையிடம் கொடுக்கப்பட்டது. மீண்டும் 7.10.1975 அன்று ரூபாய். 900/- கொடுக்கப்பட்டது. ஆக மொத்தம் 5.3001 சுடுகாட்டு மராமத்து வேலைக்காக கொடுக்கப்பட்டது. இன்று வரை இந்து நாடார் மேலப்பேட்டை உறவின்முறை சங்கத்திற்கும், தேனி இந்து நட்டாத்தி நாடார். உறவின்முறைக்கும் நல்ல உறவு நீடித்து வருகிறது.

சமுதாய பணி

தேனி இந்து நட்டாத்தி நாடார் உறவின்முறையின் சமுதாய பணி

1976 -ம் ஆண்டு பெண்களுக்கு தையல் எம்பிராய்டரி பயிற்சிப் பள்ளி திறப்பதற்கும், எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகளும் 1 முதல், 5 வகுப்பு வரை ஆங்கிலப்பள்ளி தொடங்குவதற்கும் நட்டாத்தி உறவின் முறையார் முயற்சி செய்தனர். ஏற்கனவே தேனி மேலப்பேட்டை நாடார் சங்கத்தினரால் கல்வி நிலையங்கள் துவங்கி சிறப்பாக செயலாற்றி வருவதால் நாம் பள்ளி ஆரம்பிக்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டது. அதற்கு பதிலாக மருத்துவமனை துவங்கலாம் என்று முடிவு எடுத்து 23.1.1976இல் திரு.ரி.நாகராஜன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் N.R.T. ரோட்டில் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட இடத்தில் தேனியையும், சுற்றுப்புற கிராமங்களையும் சார்ந்த ஏழை, எளிய மக்களுக்கு சாதி, சமய இன வேறுபாடு கருதாமல் மருத்துவ உதவி அளிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் மருத்துவமனை கட்டுவதென்று தீர்மானிக்கப்பட்டது. அதனடிப்படையில் அதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் 7.7.1976 அன்று தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறைத் தலைவருமான திரு. M.S.V. சாமிக்காளை நாடார் அவர்கள் தலைமையில் உசிலம்பட்டி நட்டாத்தி கூஷத்திரியகுல இந்து நாடார் உறவின்முறை தலைவர் திரு. V.குருசாமிநாடார்(VKS) அவர்களால் மருத்துவமனை திறந்து வைக்கப்பட்டது. ஆரம்பத்தில் ஒரு மருத்துவரும்,இரண்டு செவிலியர்களையும் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த மருத்துவமனையில் மூன்று அறைகளை கொண்டு இயங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மருத்துவமனையின் செயல்பாட்டில் பெருமளவு முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து தேனி மட்டுமல்லாது அம்மாவட்டத்தை சுற்றியுள்ள பொதுமக்களும், ஏமை, எளிய நடுத்தா வகுப்பினர் இங்கு வந்து சிகிச்சை பெற்றுச் செல்வதால் இந்த மருத்துவமனைக்கு வரும் அனைவரின் நல்லாசியுடன் இன்று வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தேனி பகுதியில் மருத்துவமனை சிறப்பாக இயங்கி வந்தாலும் கர்ப்பிணி பெண்கள் மகப்பேறிற்காக நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலை இருந்தது.

அதை கருத்தில் கொண்டு மகப்பேறு மருத்துவ பிரிவு துவங்க வேண்டும் என்று முடிவு செய்து அடுத்த இரண்டு ஆண்டுகளில் பிரசவ ஆஸ்பத்திரியினை கட்டுவதென்று தீர்மானிக்கப்பட்டது. அதற்காக ஏழு அறைகளும், மருந்துகள் வைப்பதற்கு தனி அறையும் திரு. கா. சீனியப்ப நாடார், திரு. அ.பழனிச்சாமி நாடார் ஆகியோர் பொறுப்பாக இருந்து இந்த பிரிவு கட்டப்பட்டன. 3.2.1978இல் திரு. E.A.K. ஆதி நாராயண நாடார் அவர்கள் தலைமையில், மத்திய மின்துறை அமைச்சர் உயர்திரு பேராசிரியர் பா.ராமச்சந்திரன் அவர்களால் இந்த மகப்பேறு மருத்துவப் பிரிவு கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.

இந்த மருத்துவமனைக்கு தேனி பகுதி மக்கள் மட்டுமல்லாது கேரள மாநிலமான மூணாறு, குமுளி மற்றும் சுற்றி வட்டாரப்பகுதி மக்களும் இங்கு வந்து சென்றதாலும், அனைத்து மக்களிடமும் மிகுந்த வரவேற்பை பெற்ற காரணத்தினாலும் இதனை மேலும் விரிவாக்க வேண்டும் என திட்டமிடப்பட்டது.

அதனடிப்படையில் உறவின் முறையார் மகப்பேறு மருத்துவமனைக்கு சிறப்பு அறைகள் கட்டுவதென்று தீர்மானித்து ஏழு சிறப்பு அறைகள் கட்டி முடிக்கப்பட்டன. 8.12.1986இல் மகப்பேறு மருத்துவமனையின் சிறப்பு அறைகள், கோத்தகிரி காஸ்லி எஸ்டேட் உரிமையாளர் திரு. G.T சௌந்திரபாண்டியராஜ், B.E. அவர்கள் தலைமையில், தூத்துக்குடி நட்டாத்தி நாடார்கள் உறவின்முறை தலைவரும், நட்டாத்தி நாடார்கள் தலைமை சங்க உபதலைவருமான திரு. V.M. வேலாயுத நாடார் அவர்கள் முன்னிலையில் கேரள மாநில மேதகு ஆளுநர் பேராசிரியர் திரு. பா.ராமச்சந்திரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

அவ்விழாவில் தேனி அல்லிநகரம் நகர் என்ற முதல் தலைவர் உயர்திரு N.R. அழகர்ராஜா, B.A. அவர்களும் மருத்துவமனை ஆலோசகரும் மருத்துவமனையின் வளர்ச்சிக்கு பேருதவி செய்து வந்தவருமான தேனி சீனியர் டாக்டர் திரு. A.V. சந்தான கிருஷ்ணன் M.B.B.S. அவர்களும் சிறப்புரை ஆற்றினார்கள்.

தொடர்ந்து இம்மருத்துவமனையின் சிறப்பை அறிந்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக வருவதாலும், அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்றால் தேனி பகுதியிலிருந்து நீண்ட தொலைவில் உள்ள மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் நிலை நீடித்து வந்ததை அறிந்ததாலும், அனைத்து பிரிவு சிகிச்சைகளும் பெறப்படும் பொருட்டு 1.7.1988இல் குளிர் சாதன வசதியுடன் கூடிய நவீன அறுவைச் சிகிச்சைப் பிரிவு ரூபாய் இரண்டு லட்சம் செலவில் கட்டி முடிக்கப் பெற்று Dr.A.V. சந்தான கிருஷ்ணன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 1988ஆம் ஆண்டு ஐந்து மருத்துவர்களையும், 18 செவிலியர்களையும் கொண்டு மருத்துவமனை சிறப்பாக இயங்கி வந்தது.

அப்போதைய காலகட்டங்களில் வெளி நோயாளிகள் சுமார் 200 பேர் தினமும் சிகிச்சை பெற்று வந்துள்ளார்கள். மகப்பேறுக்காக தினமும் 3 முதல் 5 பேர் வரையிலும் வந்துள்ளார்கள். குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையும், அறுவை சிகிச்சையின் மூலம் பிரசவமும் பார்க்கப்படுகிறது. வசதியற்ற ஏழை எளியவர்களுக்கு சாதி, மதம், இன பேதமின்றி குறைந்த செலவில் மருத்துவ சேவை செய்து வந்துள்ளது.

பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப சுற்று வட்டாரப் பகுதியிலிருந்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கை பெருக்கத்தினால் இட நெருக்கடி ஏற்பட்டது. இதனை உணர்த்த நிர்வாகம் மேலும் அம்மருத்துவமனையை சுற்றி அதிக அளவில் மக்கள் வந்து செல்லும் வகையில் மேலும் இம்மருத்துவமனையை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டது.

இதனடிப்படையில், 2005 ஆண்டு தலைவர் திரு.ரி. நாகராஜன், செயலாளர் திரு.S.K.A. சிவக்குமார், பொருளாவர் திரு. பாலகுருசாமி ஆகியோர் தலைமையில் தேனி N.R.T ரோட்டில் 75 சென்ட் காலிமனை வாங்கப்பட்டது. பின்னர் 2010ஆம் ஆண்டு தலைவர் திரு.E.A.K. ஆதிக்கண் நாடார், செயலாளர் திரு.V.M.ரவி. பொருளாளர் திரு.P. காமராஜர் ஆகியோர் தலைமையில் N.R.T. ரோட்டில் காலிமனை இடத்தில் நட்டாத்தி உறவின்முறையின் சார்பில் வணிக வளாகம் கட்டப்பட்டது.

15.07.2011ல் கிரகப் பிரவேச விழாவும், 15.08.2011 அன்று புதிய வணிக வளாக கட்டிடத் திறப்பு விழா நடைபெற்றது.

2013ஆம் ஆண்டு. 06.02.2013இல் தலைவர். திரு.V.K. ராமச்சந்திரன், செயலாளர் கி.வைரவன், பொருளாளர் திரு. ஸி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் மருத்துவமனை முதல் மாடி நோயாளிகளின் தங்கும் அறைகளை சீரமைத்து மகளிர் தங்கும் விடுதி (WORKING WOMENS HOSTEL) அமைக்க வேண்டும் என்று முடிவு செய்து ஆரம்பிக்கப்பட்டது.

2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் புதிய நிர்வாகிகளாக தலைவர். திரு.V.K ராமச்சந்திரன், செயலாளர் புது. கமலக்கண்ணன், பொருளாளர், திரு.K.N குருசாமி ஆகியோர் பதவியேற்றனர். 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பதவி ஏற்ற நிர்வாகிகள் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து உறவின் முறை பொருளாதார வளர்ச்சிக்காக சில நிர்வாக சீர்த்திருத்தங்களையும், புதிய வணிக வளாக கட்டிடத்தில் முதல் மாடியில் யூனியன் பேங்க (UNION BANK OF INDIA) மற்றும் தரைதளத்தில் சென்ட்ரல் பேங்க் (CENTRAL BANK OF INDIA) ஆகிய இரு வங்கிகளுக்கு வாடகைக்கு விட்டு உறவின் முறை பொருளாதாரத்தை அதிகரிக்கச் செய்துள்ளனர்.

2014ஆம் ஆண்டு முதல் தமிழ்வழி கல்வி கற்கும் மாணாக்கர்களுக்கு ரூ. 2000 முதல் ரூ.6000வரை கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

அதுபோல் மருத்துவமனையை பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையாக மாற்றி அனைத்து மருத்துவப்பிரிவுகளையும் கொண்டு வந்துள்ளனர். அதேபோல் உயர் வகை மருத்துவ கருவிகள் குறிப்பாக ஜெர்மன் நாட்டிலிருந்து லேப்ராஸ்கோப் கருவி வரவமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இக்காலக்கட்டத்தில் செவிலியர் கல்லூரி ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது.

2017 முதல் 2020 வரையுள்ள காலகட்டங்களில் தலைவராக திரு.C. மாரீஸ்வரன், செயலாளராக திரு. புது கமலகக்கண்ணன், பொருளாளராக திரு.P. முருகன் அவர்கள் பொறுப்பேற்றுள்ளார்.

2017 முதல் 2020 கால கட்டங்களில் செவிலியர் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டுள்ளது மற்றும் மருத்துவமனை பயன்பாட்டிற்காக ஆம்புலன்ஸ் வாங்கப்பட்டுள்ளது மற்றும் புற்றுநோய் சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நோயாளிகளின் வசதிக்காக வரவேற்பு பிரிவுகளில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன.

கொரோனா காலகட்டங்களில் நட்டாத்தி மக்களின் உதவிக்காக ரூ.3000/- வழங்கப்பட்டுள்ளது மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு மூன்று நேர உணவுடனும், முழுமாத ஊதியத்துடன் பணியில் இருந்துள்ளனர்.

இதே காலகட்டத்தில் அவசர பிரிவு முன்பகுதியில் தகர செட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. 2017 முதல் 2020 காலகட்டம் முதல் Government Personner Scheme அமைக்கப்பட்டுள்ளது.

2018 காலகட்டத்தில் புதிதாக கருத்தரித்தல் மையம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்ற மருத்துவமனையாக திகழ்கின்றது. 2020 முதல் 2023 காலகட்டத்தில் தலைவராக திரு. C.மாரீஸ்வரன், செயலாளராக திரு.பது.கமலக்கண்ணன், பொருளாளராக திரு. முருகன் பதவி ஏற்றுள்ளனர்.

இக்காலகட்டத்தில் 3.08.2021 முதல் புதிதாக Oncology, ஆய்வக பிரிவ, Dialysis மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவிற்கு வருகை தந்த வணிக சங்க தலைவர் திரு. விக்ரமராஜா இப்பிரிவுகளை திறந்துவைத்தார்.

6.08.2021 முதல் நமது மருத்துவமனையில் இரத்த வங்கியானது செயல்பட்டு கொண்டிருக்கிறது.

14.04.2022 அன்றுமுதல் நட்டாத்தி Scan ற்காக பணிகள் ஆரம்பிக்கப்பட்டு அதே வருடம் சித்திரை முதல் நட்டாத்தி - Scan ஆனது செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

01.05.2022 அன்று நட்டாத்தியின் குடும்ப விழாவானது முதன்முறையாக NRT மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. அங்கு நட்டாத்தியின் மக்களுக்காக கலை நிகழ்ச்சிகளும், மக்களை கௌரவப்படுத்தும் விதமாக நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

01.07.2022 முதல் தேனி நட்டாத்தி மருத்துவமனையானது முழுவதுமாக கணிணி மயமாக்கப்பட்டது.

மருத்துவமனையின் மருத்துவப்பிரிவானது விரிவாக்கம் செய்யப்பட்டு 300 - வார்டின் மேல்பகுதியில் மருந்துகளின் மொத்த இருப்பிடமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.

செவிலியர் கல்லூரி விரிவாக்கத்திற்காக ஆண்டிபட்டி அருகே புதிதாக இடம் வாங்கப்பட்டுள்ளது.

2022 - 2023 காலகட்டத்தில் புதிதாக ENT, Gastro, Ortho, PICU தொழில்நுட்பத்துடன் தொடங்கப்பட்டுள்ளது.

2022 - 2023 காலகட்டங்களில் Multi Speciality Full Accommodation மருத்துவமனை தாம் உயர்த்தப்பட்டு NABH தாச்சான்றிதழ்களுடன் இயங்கும் தேனி மாவட்டத்தின் ஒரே மருத்துவமனையாக தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை திகழ்கின்றது.

2023 டிசம்பர் மாதம் மகாசபை கூட்டத்தில் 2014 - 2023-ல் தேனி நட்டாத்தி உறவின்முறை, அனைத்து நாடார் உறவின்முறைக்கும் சிறந்த எடுத்துக்காட்டாகவும் மருத்துவமனையை தேனியிலேயே முதல் மருத்துவமனையாக வளர்ச்சி பாதைக்கு எடுத்து சென்ற திரு. கமலக்கண்ணன் அவர்களை நான்காவது முறையாக மகாசபை கூட்டத்தில் உறவின்முறையாளர்கள் அனைவரும் ஒருமனதாக தேர்ந்தெடுத்து கெளரவபடுத்தினர்.

தற்பொழுது 2023 - 2026-ல் இருந்து தலைவராக திரு.சுப்பிரமணி அவர்களும், செயலாளராக திரு. கமலக்கண்ணன் அவர்களும், பொருளாளராக திரு. அடைக்கலம் அவர்களும் மற்றும் நமது செயலாளர் அவர்கள் நிர்வாகத்தின் தற்பொழுது நிலையை நட்டாத்தி உறவின்முறை இளைஞர்கள் தெரிந்து கொள்வதற்காக நிர்வாக உறுப்பினர்கள் அனைவரும் புதியதாக இதுவரை உறுப்பினர்களாக இல்லாதவர்களை நிர்வாகத்தில் அமர்த்தியுள்ளனர்.

இன்று நமது மருத்துவமனையில் 60- க்கும் மேற்பட்ட மருத்துவர்களுடன், 25- க்கும் மேற்பட்ட துறைகளுடன் 120 - Bed வசதிகளுடன் இயங்கிகொண்டிருக்கின்றன.

நமது மருத்துவமனையில் உயிர்காக்கும் சிகிச்சை பிரிவுகள், குழந்தைகள் நலப்பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, 24 மணிநேரமும் உயரிய தொழில்நுட்பத்துடனும் இயங்கும் தேனி மாவட்டத்தின் ஒரே மருத்துவமனை தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை திகழ்கின்றது.

நமது மருத்துவமனையில் புதிதாக சிற்றுண்டி ஆரம்பிக்கப்பட்டு விலை குறைவாகவும், ஆரோக்கியத்துடனும் இருக்கக்கூடிய உணவுவகைகள் பொதுமக்கள் மற்றும் நோயாளிகளுக்கு வழங்கப்படுகின்றது.

Appointment